சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மாற்றம் - டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

 

டிஎன்பிஎஸ்சி சார்பாக ஜூலை 28-ம் தேதி நடத்தப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒருங்‌கிணைந்த பொறியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம்‌, கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி  விண்ணப்பங்களைக்‌ கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில்‌ விண்ணப்பதாரர்கள்‌ பெற்ற மதிப்பெண்‌ விவரங்கள்‌ கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளராகியபணிகளுக்கான இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் ஜூலை 28-ம் தேதி நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி சார்பில், வரும் 28-ம் தேதி நடத்தப்பட இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணி துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான, இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், வரும் 28-ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி துவக்க விழா காரணமாக, 28ம் தேதி, அரசால் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அன்றைய நாளில் திட்டமிடப்பட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1ம் தேதி காலை 10 மணிக்கு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.