761 காலிப்பணியிடங்கள்... ரூ. 71,000 வரை சம்பளம்... டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு!!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய சாலை ஆய்வாளர் பணிக்கான 761 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கீழ் சாலை ஆய்வாளர் பணி இடம்பெறுகிறது.

காலிப்பணியிடங்கள்:

சாலை ஆய்வாளர் - 761 பணியிடங்கள்

வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து Civil Draughtsmenship பாடத்தில் ஐடிஐ சான்றிதழ் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • எழுத்து தேர்வானது 07.05.2023 அன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெற உள்ளது.

சம்பள விவரம்:

சாலை ஆய்வாளர் பதவிக்கு மேற்கண்ட செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 19,500 - 71,900 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம் :

ஒரு முறை பதிவு கட்டணம் : ரூ. 150

தேர்வு கட்டணம் : ரூ. 100

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://apply.tnpscexams.in/

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.