தமிழ்நாடு அரசு துறையில் 2,455 காலி பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!!

 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் உள்ள 2,455 காலிப்பணியிடங்களை நிரபுவதற்கான அறிவிப்பு வெளியாகியது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 2-ம் தேதி 1,933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் 2,455 ஆக பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்தது.

பதவியின் பெயர்: உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் (Junior Engineer) நகர திட்டமிடல் அலுவலர், டெக்னிக்கல் அசிஸ்டண்ட், வரைவாளர், சூப்பர்வைசர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் 

காலிப்பணியிடங்கள்: 2,455

கல்வித்தகுதி: 

சிவில் மெக்கானிக்கல், இன்ஜினியரிங் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள், பி.எஸ்.சி முடித்தவர்கள் என பணிக்கேற்ப கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

தேர்வு முறை எப்படி? 

தகுதியான விண்ணப்பதார்ர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். அதன்பிறகு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 29, 30- ஆகிய தேதிகளில் நடைபெறும். 

சம்பளம்: 

சம்பளத்தை பொறுத்தவரை பணிகளின் தன்மைக்கேற்ப மாறுபடும். அதிகபட்சமாக பொறியாளர் பணிகளுக்கு ரூ.1,38,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது, உதவிப்பொறியாளர் (மாநகராட்சி); 37,700 - 1,38,500 உதவிப்பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்); 37,700 - 1,38,500 உதவிப்பொறியாளர் (நகராட்சி); 37,700 - 1,38,500 உதவிப்பொறியாளர் (சிவில்) ; 37,700 - 1,38,500 பணி ஆய்வாளர் பணிக்கு ரு.18,200 - 67,100 - வரை சம்பளமாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 

துறை வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம், எழுத்துதேர்வுககன பாடத்திட்டம், முழுமையாக கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். 

விண்ணப்பதாரர்கள் முழுமையான விவரங்களை நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது application.maws@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.03.2024