2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்... TRB தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதன்படி தமிழ் - 394, ஆங்கிலம் - 252, கணிதம் - 233, இயற்பியல் - 292, வேதியியல் - 290, தாவரவியல் - 131, விலங்கியல் - 132, வரலாறு - 391, புவியியல் - 106 ஆகிய பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ல் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரிகள், வரும் நவம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 2024ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ் வழியில் கற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின், 1800 425 6753 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தேர்வர்கள் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.