130 செயற்கைக் கோள்கள்... இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ராக்கெட்... விண்ணில் பாய்ந்த மாணவர்களின் ராக்கெட்!!

 

இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ராக்கெட் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைகோள்கள் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

டாக்டர் அப்துல்கலாம் பவுண்டேஷன் மற்றும் மார்டின் பவுண்டேஷன் ஸ்பேஸ் ஜோன் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து ஹைப்ரிட் ராக்கெட்டை தயாரித்தனர். ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் இதுவாகும்.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட், இன்று காலை 8.15 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பட்டிபுலம் கிராமத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், செயற்கைகோள்களின் தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.