ஹோட்டல் அறையில் ஆடை இல்லாமல் கிடந்த பெண் காவலர்.. கணவன் வெறிச்செயல்.. பீகாரில் கொடூரம்!

 

பீகாரில் பெண் காவலர் ஒருவர் உடலில் ஆடை ஏதும் இல்லாமல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள காகோ காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் கஜேந்திர யாதவ். இவர், தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டலில் வியாழக்கிழமை (அக். 19) மாலை அறையை முன்பதிவு செய்ததுள்ளார். அவரது மனைவி ஷோபா குமாரி காலையில் அவரைச் சந்திக்க அங்கு வந்து தங்கியுள்ளார்.

மனைவி ஹோட்டல் அறைக்கு வந்த 20 நிமிடங்களுக்குப் பிறகு, கஜேந்திர யாதவ் வெளியே சென்றிருக்கிறார். ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் தான் காலை உணவு வாங்கிவரப் போவதாகவும் சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் தனது அறைக்குத் திரும்பவில்லை.

இதனால் ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அங்கு அவரது மனைவி ஷோபா உடலில் ஆடையின்றி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

உயிரிழந்த பெண் ஷோபா குமாரி, அர்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்து இருக்கிறார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமாகியுள்ள கஜேந்திர யாதவையும் போலீசார் தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டதாகத் தெரிகிறது என்று டிஎஸ்பி கிருஷ்ணா முராரி தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்து ஆயுதங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அவர் ஹோட்டல் அறையில் தனது கணவரை எந்தச் சூழ்நிலையில் சந்தித்தார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

மருத்துவ வாரியத்தின் மேற்பார்வையின் கீழ் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பபட்டுள்ளது. இந்த வழக்கை மேலும் முறையாக விசாரிக்க தொழில்நுட்ப குழுக்களையும் காவல்துறை அமைத்துள்ளது.