வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் மேல் பணம் எடுக்க தடை.. உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி.!

 

பெங்களூருவில் உள்ள ஒரு வங்கிக்கு ரூ. 50 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் எடுப்பதற்கு ரிசர்வ் பேங்க் தடை விதித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாக கொண்டு தேசிய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணப் பரிமாற்றம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த வங்கியில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்கு ரூ. 50 ஆயிரத்திற்கு அதிகமாக வாடிக்கையாளர்களால் ஒரே நேரத்தில் பணம் எடுக்க முடியாது.

மேலும் இந்த வங்கிக்கு புதிய லோன்களை வழங்குதல், ஏற்கனவே உள்ளவற்றை புதுப்பித்தல் போன்ற அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கியால் புதிய முதலீட்டையும் ஏற்படுத்த முடியாது. ரிசர்வ் வங்கி இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்தாலும், சம்பந்தப்பட்ட தேசிய கூட்டுறவு வங்கியின் லைசென்ஸ் எதுவும் ரத்து செய்யப்படவில்லை.

மத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும், இந்த கட்டுப்பாடுகளின் கீழ், புதிய கடன்களை வழங்கவோ, பழைய கடன்களை புதுப்பிக்கவோ முடியாது. வங்கியும் புதிதாக முதலீடு செய்ய முடியாது. இந்த நிதியத்தால் கடன் வாங்கவோ, புதிய வைப்புத்தொகைகளை எடுக்கவோ, அதன் எந்தக் கடமைகளின்கீழ் எந்தக் கொடுப்பனவுகளையும் விநியோகிக்கவோ, எந்த ஒப்பந்தத்திலும் நுழையவோ, அதன் சொத்துக்கள் எதையும் விற்கவோ முடியாது.

ரிசர்வ் வங்கி, வங்கி பொருளாதார நிலை மேம்படும் வரை, கட்டுப்பாடுகளின் கீழ் வணிகத்தைத் தொடரும், பின்னர் நிலைமையைப் பார்த்து, இந்த வழிமுறைகளில் மாற்றங்களை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளது. இருப்பினும், பணத்தை கையாளுவதில் இந்த வங்கி திறமையின்றி செயல்பட்டால் தடை நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.