இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா ஏன் 50 சதவீத வரி விதிக்கிறது.. முன்னாள் எம்.பி. அப்துல்லா விளக்கம்!!
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பிற்கான காரணங்கள் குறித்து திமுக முன்னாள் எம்.பி. அப்துல்லா எளிய முறையில் விளக்கம் அளித்துள்ளார். சமூகத்தளத்தில் எம்.எம். அப்துல்லா எழுதியுள்ளதாவது,
”அமெரிக்கா நமக்கு அதிகப்படியான வரியை ஏன் விதிக்கிறது என்பதை எளிமையாக விளக்க முயலுகிறேன்
1.நாங்க உங்கிட்ட நிறைய்ய்ய்ய பொருள்களை எங்க அமெரிக்க டாலர் காசைக் குடுத்து வாங்குறோம். அதுனால உனக்கு நிறைய்ய்ய்ய டாலர் காசு சேருது.
2. ஆனா நான் உங்கிட்ட வாங்குறதுக்கு சமமா நீ என் நாட்டில் இருந்து என் பொருட்களை வாங்குறது இல்லை. அதாவது நான் உன்கிட்ட 100 டாலர் குடுத்து பொருட்கள் அமெரிக்காவுக்கு இறக்குமதி பண்ணுறேன். நீ என்கிட்ட 50 டாலர் பெறுமான பொருட்களைதான் வாங்கி இந்தியாவுக்கு இறக்குமதி பண்ணுற! அதுனால உன் கையில் ஒவ்வொரு ஆண்டும் 50 டாலர் மிச்சம் இருக்கு ( 50 பில்லியன் டாலர்கள்)
3.நீ இந்த டாலரை வச்சு மிகக் குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து குரூட் ஆயில் வாங்குற! அம்பானி அதை பெட் ரோல்
டீசலா சுத்திகரிக்கிறாரு! அதை நீ ஐரோப்பாவுக்கு என்னை விட குறைந்த விலையில் வித்துட்டு ஈரோ காசா வாங்கிக்கிற!
4.இப்ப ஐரோப்பா உன்கிட்ட வாங்காம அரபு நாடுகளிடம் வாங்கினா அமெரிக்க டாலர் காசை குடுத்துதான் வாங்க முடியும். ஈரோ காசை அரேபியா வாங்காது.
5.இப்படி நீ குறைந்த விலைக்கு வித்து ஈரோ காசை வாங்கிக்கிறதால என்னோட அமெரிக்க டாலர் காசின் பயன்பாடு பெருமளவில் குறைந்து போகுது.
6.நீ எங்க அமெரிக்க டாலரை ரஷ்யாகிட்ட குடுக்குற. அவன் அதை வச்சு ஆயுதமா வாங்குறான். இது எங்க அமெரிக்க ரானுவ செயல்பாட்டையும் பாதிக்கிது!
7.செரி இப்படி குறைஞ்ச விலைக்கு ரஷ்யாவில் இருந்து வாங்குறீல்ல.. அந்த பெனிஃபிட்டை மக்களோட பகிர்ந்துக்கணும்ல? ஆனா நீ பெட்ரோல் டீசல் விலையை மக்களுக்கு குறைக்கிறியா? இல்லை அந்த கொள்ளை லாபம் மக்கள்கிட்ட பகிந்துக்காம அம்பானிக்கும் அவருக்கு ஆன்சிலரி தொழிற்சாலைகளா இருக்குற பல அய்யர்களின் கம்பெனிக்கும் தான் போய் சேருது!
8.அதுனால நாங்க இப்ப என்ன பண்ணுறோம் இந்தியாவில் இருந்து பொருள் வாங்கினா 50% அதிக வரினு போட்டுட்டோம். அதுனால இந்தியா பொருட்களுக்கு எங்க நாட்டுல விலை கூடிரும். எவனும்
வாங்க மாட்டான் .. வாங்காததால எவனும் இந்தியாவில் இருந்து இறக்குமதி பண்ண மாட்டான். எங்க டாலர் காசு உனக்கு வராது. இனி நீ ரஷ்யாவுக்கும் குடுக்க முடியது ஐரோப்பாவுக்கும் அனுப்ப முடியாது.
9.“நீ அம்பானிக்காகவும், அய்யருங்களுக்காகவும் அரசாங்கம் நடத்த நான் நாசமா போகணுமா?”
அம்பானி என்ற தனிநபரும் உயர்சாதி பிஜேபி அனுதாபிகளும் பலன் அடைவதற்காக மோடி என்ற அவரது நண்பர் எடுத்த சுயநல முடிவினால் இன்றைக்கு லட்சக்கணக்கான தொழில்கள் பாதிப்படைந்து திருப்பூர் போல தெருவிற்கு வந்துள்ளன.
எழுதியவர் எம்.எம்.அப்துல்லா Ex. M.P.’” என்று பதிவிட்டுள்ளார்.