மெட்ரோவில் காதலர்கள் செய்த காரியம்! பெட்ரூம்ல பண்ண வேண்டியதை எல்லாம் ட்ரெயின்லயே செஞ்சுட்டாங்க! வைரல் வீடியோ
டெல்லி மெட்ரோ ரயிலில் உலகை மறந்து காதல் ஜோடிகள் முத்தமிடும் காணொலி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பெரு நகரங்களில் எல்லாம் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாட தொடங்கி உள்ளது. சாலை மார்க்கமாக கார், பேருந்து அல்லது டூவீலர் போன்ற வாகனங்களில் பயணம் செய்வது என்பது மிக கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய ஒரு விஷயமாக மாறி விட்டது. ஆனால் மெட்ரோ ரயில், இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வை வழங்கி வருகிறது.
மெட்ரோ ரயில்கள் மின்னல் வேகத்தில் பறக்க கூடியவை. ஒரு நொடி கூட தாமதிக்காமல் குறித்த நேரத்திற்கு வந்து விடும். போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் மெட்ரோ ரயில் நிலையங்களும், பெட்டிகளும் ஹை-டெக்காக இருக்கும். எனவே பயணிகள் மத்தியில் மெட்ரோ ரயில்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மெட்ரோ ரயில்களை ஒரு சில இளைஞர்களும், இளம்பெண்களும் தற்போது ஓயோ ஹோட்டலாக மாற்றி வருகின்றனர்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில்தான், இத்தகைய சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. டெல்லி மெட்ரோ ரயில்களில், காதலர்கள் முத்தமிட்டு கொண்டும், கட்டியணைத்து கொண்டும், பயணம் செய்யும் வீடியோக்கள் கடந்த காலங்களில் பலமுறை வெளியாகியுள்ளன.
இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் காட்டு தீயை போல் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் டெல்லி மெட்ரோ ரயிலின் ஒரு பெட்டியில் இளம்பெண்ணும், ஒரு இளைஞரும் நின்றுக்கொண்டு மெய் மறந்து முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொண்டனர்.