தில் இருந்தா தீ வை பாப்போம் உசுப்பேத்திய பெட்ரோல் பங்க் ஊழியர்.. போதையில் தீ வைத்த வாலிபர்.. பகீர் வீடியோ!

 

தெலுங்கானாவில் குடிபோதையில் சிகரெட் லைட்டரால் பெட்ரோல் நிலையத்துக்கு தீவைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாச்சரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங் ஒன்றுக்கு சிரன் என்ற நபர் குடிபோதையில் வந்துள்ளார். கையில் சிகரெட் லைட்டரை வைத்துக்கொண்டு அவர் வந்த நிலையில் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த அருண் என்ற ஊழியர், தைரியம் இருந்தால் நிலையத்துக்கு தீவைக்குமாறு அவரை தூண்டியுள்ளார். 

குடிபோதையில் இருந்த சிரன் நிஜமாகவே பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது தீ வைத்துவிட்டார். இதனால் அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீப்பற்றிய சமயத்தில் அங்கு 10 முதல் 11 பேர் வரை இருந்துள்ளனர். ஒரு தாயும் அவரது குழந்தையும் தீயில் இருந்து நூலிழையில் தப்பினர்.