திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட்.. அடுத்த அதிர்ச்சி வீடியோ.. மீண்டும் சர்ச்சையில் தேவஸ்தானம்!
திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது லட்டு குறித்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை ஒன்றிய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்யப்பட்டத்தில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.
சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.