4,062 காலி பணியிடங்கள்.. அரசுப் பள்ளியில் வேலை வாய்ப்பு.. லட்சத்தில் சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

 

ஒன்றிய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் EMRS பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒன்றிய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் (EMRS) இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் 8 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள முதல்வர், முதுகலை ஆசிரியர்கள், அக்கவுண்டண்ட், டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட், உள்ளிட்ட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவியின் பெயர்: முதல்வர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அக்கவுண்டன்ட், ஜூனியர் செயலக உதவியாளர், லேப் அட்டென்டன்ட்.

காலியிடங்கள்: 4,062 

முதல்வர் பணிக்கு 303 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் (Post Graduate Teachers or PGTs) பணிக்கு 2,266 பேர், அக்கவுண்டன்ட்(Accountant) பணிக்கு 361 பேர், ஜூனியர் செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant) பணிக்கு 759 பேர், லேப் அட்டென்டன்ட் (Lab Attendant) பணிக்கு 373 பேர் என மொத்தம் 4,062 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: 

முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பிஎட் படித்தவர்களும், எம்எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்டெக் படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அக்கவுண்டிங் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு அல்லது சயின்ஸ் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

முதல்வர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அக்கவுண்டிங், ஜூனியர் செயலக உதவியாளர், லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் வயது தளர்வு உண்டு.

சம்பளம்: 

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.2.09 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதன்படி முதல்வர் பணிக்கு ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் வரையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 100 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

அக்கவுண்டென்ட் பணிக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரையும், ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், லேப் அட்டென்டென்ட் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ56,900 வரையும் சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: கணிணி வழித்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொழித்தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறைந்தபட்சம் மதிப்பெண்கள் கட்டாயம். 

விண்ணப்ப கட்டணம்: 

முதல்வர் பணிக்கு ரூ. 2,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ. 1,500, பிற பணிகளுக்கு ரூ. 1,000 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி:

குதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் emrs.tribal.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய அக்டோபர் 19ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்வோர் ஓஎம்ஆர் சீட் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டங்கள் emrs.tribal.gov.in இணையதளத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.