363 காலிப்பணியிடங்கள்.. ECIL நிறுவனத்தில் ரூ.9,000 ஊக்கத்தொகையுடன் வேலை.. உடனே விண்ணபிங்க!
இசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒன்றிய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இசிஐஎல் எனும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 2 பிரிவுகளில் காலியாக உள்ள 363 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
பதவியின் பெயர்: Graduate Engineering Apprentices, Technical Apprentices
காலி பணியிடங்கள்: 363 (Graduate Engineering Apprentices - 250, Technical Apprentices - 113)
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் BE, B.Tech, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும். SC / ST - 5 ஆண்டுகள், OBC (NC) - 3 ஆண்டுகள், PWBD - 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை சம்பளமாக வழங்கப்படும் .
தேர்வு செயல்முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2023