பிளாட்பாரத்தில் ஏற முயன்ற பெண்.. ரயிலில் சிக்கிய பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ

 

மகாராஷ்டிராவில் ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணை போலீசார் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் ரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணை காப்பாற்றினார். அந்த பெண்ணை அவர் காப்பாற்றிய வீடியோ பிளாட்பார்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

ஜல்கான் ரயில் நிலையத்தில் ரயில் நடைமேடைக்கு வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பார்மிற்கு வர முயன்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றார். இருப்பினும் ரயில் வேகமாக வந்ததால், அந்தப் பெண் ரயிலுக்கும், பிளாட்பார்மிர்க்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.

null


அதன் பின் ரயில், அந்த பெண்ணை சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றது. உடனே துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படை போலீசார் வேகமாக ஓடி வந்து அந்த பெண்ணை பிளாட்பார்மை நோக்கி இழுத்து காப்பாற்றினார். பின்னர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.