சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட வெயிட்டர்.. காரில் 1 கி.மீ தூரம் இழுத்துச் சென்ற கொடூரம்.. பகீர் வீடியோ!

 

மகாராஷ்டிராவில் சாப்பிட்ட உணவுக்குக் காசு கேட்ட வெயிட்டரை காரில் ஒரு  கிலோமீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்து சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் காரில் வந்த 3 பேர் உணவு அருந்தியுள்ளனர். சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க  UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர். 

அவர் வருவதற்குள்  நைசாக அங்கிருந்து நழுவிய மூவரும் தங்களின் காரில் ஏறி  தப்ப முயன்றனர். அவர்கள் காரில் ஏறும் சமயத்தில் அவர்களை  பில்லுக்கு காசு கேட்டு அந்த வெயிட்டர் தடுக்க முயன்றுள்ளார். காரின் பக்கவாட்டு கதவு வழியே வெயிட்டரின் கையை பிடித்தபடி சுமார் 1 கிலோமீட்டர் அவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான  சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1 கிலோமீட்டருக்கு வெயிட்டரை இழுத்துசென்ற அவர்கள்  காரை நிறுத்திவிட்டு அவரை அடித்துத் துன்புறுத்தி அவரின் பாக்கெட்டில் இருந்த  11 ஆயிரத்து 500 ரூபாயை திருடிக்கொண்டு  கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்து அதன்பின் அனுப்பியுள்ளனர்.