குழந்தையை தூக்கி வீசிய ஆசிரியை... மழலையர் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பதைபதைக்கும் வீடியோ!!

 

மகாராஷ்டிராவில் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளை இரக்கமில்லாமல் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கண்டிவலி மேற்கில் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரியவரவே பெற்றோர் அதுகுறித்து விசாரித்தனர்.

அப்போது அந்த குழந்தைகளை ஆசிரியர்கள் அடிப்பதும், துன்புறுத்துவதும் தெரியவந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய பெற்றோர் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் ஆசிரியர்கள் மாணவர்களை தாக்குவது பதிவாகி இருந்தது.

இதை ஆதாரமாக வைத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள கண்டிவிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெற்றோர்கள் மார்ச் 27 அன்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தது. ஆசிரியர்கள் குழந்தைகளுடன் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பார்த்து நிர்வாகம் அதிர்ச்சியடைந்து காவல்துறையை அணுகியது” என்று கூறினார்.

விசாரணையில், ஆசிரியர்கள் புத்தகங்களால் குழந்தைகளை வீசி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியர்களின் பயமுறுத்தும் நடத்தையால் அவர்கள் பயந்தனர்.