இளம்பெண்ணை ஆணாக மாற்றுவதாக கூறி கொலை செய்த மந்திரவாதி.. உத்தர பிரதேசத்தில் பகீர் சம்பவம்!!

 

உத்தரப் பிரதேசத்தில் தன்பாலின ஈர்ப்பாளரான இளம் பெண்ணை ஆணாக மாற்றுவதாக கூறி மந்திரவாதி அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஷாஜஹான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் பூனம் குமாரி (27). இவர் தனது கல்லூரி படிக்கும் போது அதே பகுதியை சேர்ந்த பிரீத்தி (25) என்ற பெண்ணை சந்தித்து பழகியுள்ளார். தன்பாலின ஈர்பாலர்களான இருவரும் உறவில் இருந்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியினர் மத்தியில் பரவியுள்ளது. 

இந்த நிலையில், இவர்களின் உறவு குறித்து ஊர்காரர்களுக்கு பரவியதால் இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்து வைக்க அவர்கள் வீட்டினரால் முடியவில்லை. சமூகத்தால் ஏற்படும் மான அவமானத்திற்கு பயந்து இருவரின் குடும்பமும் தவித்து வந்தன. இப்படி இருக்க தான் ஆணாக மாறி பீரித்தியை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற யோசனை பூனம்மிற்கு வந்துள்ளது. இதை பயன்படுத்தி அவரை கொலை செய்ய பிரீத்தியின் தாயார் திட்டமிட்டுள்ளார்.  

இந்நிலையில், தாயார் ஊர்மிளா ராம் நிவாஸ் என்ற மந்திரவாதியை பார்த்து பெரும் சதித்திட்டத்தை அரங்கேற்றி உள்ளார். பூனமை கொலை செய்தால் ரூ.1.5 லட்சம் தருகிறேன் என மந்திரவாதியிடம் கூறிய பிரீத்தியின் தாயார் ஊர்மிளா, முன்பணமாக சில தொகையை கொடுத்துள்ளார். மந்திரவாதியான ராம் நிவாஸை பூனமிடம் அறிமுகம் செய்து இவர் உன்னை ஆணாக மாற்றிவிடுவார் என்று கூறியுள்ளனர்.

அதன் பேரில் இந்த சடங்கிற்காக பூனம் கடந்த ஏப்ரல் 18ம் தேதி வீட்டை விட்டு சென்றார். அதன்பின்னர் ஒரு வார காலம் கடந்த நிலையில், பூனம் மயமானது குறித்த சந்தேகம் வீட்டாருக்கு வந்துள்ளது. மாயமான பூனமின் சகோதரர் இது குறித்து போலீசாரிடம் ஏப்ரல் 26ம் தேதி புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பிரீத்தியின் செல்போன் அழைப்பு விவரங்களை சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது தான் மந்திரவாதி ராம் நிவாஸ் உடன் அவர்கள் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. தொடர்ந்து ராம் நிவாஸை கைது செய்து போலீசார் நடத்திய விசாரித்தனர். அதில், தான் பூனமை ஆணாக மாற்றுவதாகக் கூறி அழைத்து சென்று கொலை செய்துவிட்டேன், கோமதி நதிக்கரையில் உள்ள காட்டுப் பகுதியில் உடலை போட்டு சென்றுவிட்டேன் என்று கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார். இந்த கொலையில் பிரீத்திக்கும் தொடர்புண்டு என போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ராம் நிவாஸ்சுடன், இளம் பெண் பிரீத்தி, தாயார் ஊர்மிளா ஆகியோரையும் போலீசார் கைது செய்ததனர். அவர்கள் மீது இபிகோ 302, 120 பி, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.