அசுர வேகத்தில் சென்ற பள்ளி வேன்.. தவறி கீழே விழுந்த மாணவிகள்.. அதிர்ச்சி வீடியோ
குஜராத்தில் பள்ளி வேனில் இருந்து 2 மாணவிகள் கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் சாலையில் ஒரு வேன் அதிவேகமாக சென்றது. அப்போது வேனின் பின்பக்கமாக 2 மாணவிகள் கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு வெள்ளை நிற பள்ளி வேனானது ஒரு குறுகிய தெருவில் ரிவர்ஸ் சென்று உடனடியாக அதிக வேகத்தில் அந்த தெருவை நோக்கி செல்கிறது.
அதில் பின்பக்க கதவு வழியாக இரண்டு மாணவிகள் தங்கள் பள்ளி பேக்குடன் குச்சலிட்ட படி கீழே விழுகிறார்கள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பள்ளி மாணவிகளை தூக்கி அருகில் உள்ள வீட்டில் அமர வைக்கின்றனர். இரண்டு மாணவிகளும் வலியுடன் இருப்பதை இந்த வீடியோவில் காணலாம். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதுமட்டும் இன்றி அனைவரின் மத்தியிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பயனர்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். வேன் டிரைவரின் கவனக்குறைவால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேன் கதவை சரியாக மூடாததால், மாணவிகள் வெளியே விழுந்துள்ளனர்.