மாட்டு சாணம் அள்ள மறுத்த நபர்.. மொட்டையடித்து சித்ரவதை செய்த ஆதிக்க சாதியினர்.. பரபரப்பு வீடியோ
உத்தர பிரதேசத்தில் சானம் அள்ள மறுத்த நபரை சித்ரவதை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிஇல் உலா பாத்ரி கிராமத்தில் வசித்து வருபவர் பாபா காபுதரா (45). இவர் விவசாய கூலியாக வேலை பார்த்து வருபவர். அருகில் உள்ள தகோரி கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினர் இவரை தங்கள் வீட்டின் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பது, அவற்றில் கழிவுகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ய வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் பாபா அதை செய்ய மறுத்துள்ளார். இந்நிலையில் தனது கிராமத்தில் வேர்க்கடலை அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த அவரை தகோரி கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதியை சேர்ந்த நால்வர் காரில் வந்து கடத்திக்கொண்டு தங்கள் கிராமத்து தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அவரது கை கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அவரது வாயில் தண்ணீரை ஊற்றி மூச்சிரைக்க வைத்து சித்திரவதை செய்துள்ளனர். தன்னை விட்டு விடுமாறு பாபா கெஞ்சியும் இரக்கம் காட்டாமல் அவரை சித்ரவதை செய்து சிரித்து கேலி செய்துள்ளனர்.