சரிந்து விழுந்த இரும்புக் கேட்.. பிஞ்சு உயிரை பறித்த கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ!

 

மகாராஷ்டிராவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது இரும்பு கேட் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிம்ப்ரி - சின்ச்வாட் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்த இரும்பு கேட்டின் பளு காரணமாக அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அவை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

உயிரிழந்த குழந்தையின் பெயர் கிரிஜா கணேஷ் ஷிண்டே ஆகும். சம்பவம் நடந்த அன்று, அருகே உள்ளே வீட்டின் வெளியே நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​இரண்டு குழந்தைகள் கேட் பின்புறத்திற்கு சென்றனர். கேட்டின் முன் கிரிஜாவும் மற்றொரு குழந்தையும் நின்று கொண்டிருந்தது.

கேட்டின் பின்னால் நின்றிருந்த குழந்தை, அதை மூட ஆரம்பித்தபோது. ​அது குழந்தை கிரிஜா மீது நேராக விழுந்தது. இந்த சம்பவம் குறித்து பேசிய துணை போலீஸ் கமிஷனர் ஷிவானி பவார், “நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள கேட் ஏன் விழுந்தது என்று போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.