உயிரோடு இருந்த மகள்.. அடக்கம் செய்த பிறகு தந்தைக்கு வந்த தகவல்.. பீகாரில் அதிர்ச்சி!

 

பீகாரில் மகள் இறந்த துக்கத்தில் இருந்த தந்தைக்கு போனில் வந்த அழைப்பைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்.

பீகார் மாநிலம் புர்னியா பகுதியைச் சேர்ந்தவர் அன்சு குமாரி. இவர், ஒரு மாதத்துக்கு முன்பு காணாமல் போனார். சிறுமியை கண்டுபிடிக்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அன்சுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் அப்பகுதியில் கால்வாய் ஒன்றில் போலீசார் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் உடல் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு அழுகியிருந்தது.

ஆனால், அது அன்சு குமாரி என்று தவறுதளாக அடையாளம் கண்ட பெற்றோர் அது தங்கள் மகள் என்று நினைத்து இறுதிச் சடங்குகளை செய்துவிட்டனர். கடும் அதிர்ச்சியில் இருந்ததால், தந்தை இறுதிச் சடங்குகளை செய்யாமல், தாத்தா செய்திருக்கிறார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதைப் பார்த்த அன்சு, தந்தைக்கு போன் செய்து, அப்பா நான் உயிருடன் இருக்கிறேன், காதலனுடன் வீட்டை விட்டு வந்து தற்போது திருமணம் செய்துகொண்டு காதலனின் வீட்டில் இருப்பதாகக் கூறியுள்ளார். மன வேதனையில் இருந்த தந்தைக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது.

காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதாகவும், தற்போது அதே மாவட்டத்தில் உள்ள பன்மங்கி தொகுதியின் ஜான்கிநகர் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்கியிருப்பதாகவும் அந்த பெண் தனது தந்தையிடம் தெரிவித்தார். உண்மையை அறிய அந்த பெண்ணின் மொபைல் போனில் வீடியோ கால் செய்தேன். அவள் தன் மாமியார் வீட்டில் நன்றாக இருப்பதாக என்னிடம் சொன்னாள் என்று அக்பர்பூர் SHO சூரஜ் பிரசாத் கூறியுள்ளார்.

எரிக்கப்பட்ட சிறுமியைப் பொறுத்தவரை, அவரது அடையாளம் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது என்று SHO கூறினார், இது கௌரவக் கொலையாக இருக்கலாம் என்று கூறினார். “இறந்தவரின் பெற்றோரின் வீட்டை நாங்கள் சோதனை செய்தோம், ஆனால் அவர்கள் தலைமறைவாக இருந்தனர்” என்று SHO கூறினார், இது கௌரவக் கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது.