முத்தத்தைப் பறக்கவிட்ட மணப்பெண்.. அதிர்ச்சியில் திருமணத்தை நிறுத்திய மணமகன்.. வைரல் வீடியோ!

 

உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தில் மணப்பெண் விருந்தினருக்குப் பறக்கும் முத்தம் கொடுத்ததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கும் போது மணப்பெண் பறக்கும் முத்தம் கொடுத்து உள்ளார். அதே நேரத்தில் மணப்பெண்ணின் அம்மா சிகரெட் பிடித்து வரும் விருந்தாளிகளின் முகத்தில் ஊதி தள்ளியுள்ளார். 

இந்த சம்பவம் மணமகனுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. மணமகள் மற்றும் அவரது தாயார் இருவரின் செயல்களினால் விரக்தி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். 

இது குறித்து, மணமகனின் குடும்பத்தினர் கூறுகையில், அவர்கள் திருமண அரங்கிற்கு வந்தபோது வரவேற்பு வழங்கப்பட்டதாகவும், சிறிது நேரத்திலேயே மணப்பெண்ணின் தாயார் போதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.