அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! வைரலாகும் புகைப்படம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. அமெரிக்கா, இந்தியா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, இத்தாலி, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு உள்ளார்கள்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏன்செலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளார்கள்.
இதனிடையே, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று இரவு உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல்வர்களும் பங்கேற்றனர். இந்த இரவு விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.