பல்கலைக்கழகத்தின் 6வது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி.. பகீர் வீடியோ!
தெலுங்கானாவில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பட்டாஜ்செருவில் கீடெம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாதாபூர் பகுதியைச் சேர்ந்த ரேணு ஸ்ரீ என்ற மாணவி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பிறகு கல்லூரியின் 6வது தளத்திற்கு சென்ற ரேணு ஸ்ரீ திடீரென்று கைப்பிடி சுவர் மீது ஏறி அமர்ந்தார்.
அப்போது மாணவியின் தற்கொலை முயற்சியை பார்த்த சக மாணவ, மாணவிகள் குதிக்க வேண்டாம் என அவரை கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவர் கல்லூரியின் 6வது தளத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவி ரேணு ஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.