இன்னும் ஆதாருடன் பான் கார்டு இணைக்கவில்லையா..? 3 மாதம் அவகாசம் அளித்து புது அறிவிப்பு!

 

பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதிகளை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி கடந்தாண்டு மார்ச் 31-ம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த அவகாசம் வரும் இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அவகாசத்திற்கு இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் கூடுதல் அவகாசம் நீட்டிப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இணைப்புக்கான வழிமுறைகள்
உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, UIDPAN என்று டைப் செய்து உங்கள் 12 இலக்க எண்ணை உள்ளிட்டு, பத்து இலக்க பான் எண்ணை உள்ளிடுங்கள். இந்த SMS ஐ, 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். இணைப்பு உறுதியானது SMS மூலம் தெரிவிக்கப்படும்.

அல்லது இணையதளம் மூலமாக இணைக்க விரும்பினால் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணைய முகவரியில் பதிவிடவும். இந்த லிங்கில் சென்று உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து விவரங்கள் சரிபார்த்தப்பின் இணைப்பு உறுதி செய்யப்படும்.