சிக்கிம் நிலச்சரிவில் நிலைகுலைந்த நீர்மின் நிலையம்.. பரபரப்பு வீடியோ
சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி மிகப்பெரிய நீர்மின் நிலையம் அடியோடு சரிந்து விழுந்தது வீடியோ வைரலாகி வருகிறது.
சிக்கிம் மாநிலம் இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது. மலைப்பகுதியில் உள்ள சிக்கிமில் நிலச்சரிவு அபாயம் அதிகமாகும்.அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ள பகுதிகள் உள்ளன. மிகப்பெரிய அளவில் மழை பெய்யும் பகுதிகள் இருப்பதால் பெரிய அணைகள் மற்றும் நீர் மின் நிலைய திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளன.
அப்படித்தான் சிக்கிம் மாநிலத்தில் தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையில் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டீஸ்டா ஸ்டேஜ் அணை நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்படுவது உண்டு.
இதனால் ஒரு கட்டத்தில் அபாயகரமான நிலை ஏற்ட்டதால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோவில் ஒரே நொடியில் நீர் மின்நிலையம் நிலச்சரிவில் காணாமல் போனது.