நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு.. டெல்லியில் பயங்கரம்.. பரபரப்பு வீடியோ!

 

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு இடையே எற்பட்ட மோதலால் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஆங்காங்கே துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷவடசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதன் பின்னர் சிறிது நேரத்தில் மோதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு டெல்லி பார் கவுன்சில் தலைவர் கே.கே.மனன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துப்பக்கிசூடு குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் ஆயுதங்களுக்கு உரிமம் உள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


ஆயுதங்கள் உரிமம் பெற்றிருந்தாலும், வழக்கறிஞரோ அல்லது வேறு யாரும் நீதிமன்ற வளாகத்திலோ அல்லது அதைச் சுற்றியோ அதனை பயன்படுத்த முடியாது என கே.கே.மனன் கூறியுள்ளார்.