அதிர்ச்சி வீடியோ.. திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண் மீது தீ வைத்த நபர்!

 

மத்திய பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை 42 வயது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் வசித்து வந்த 42 வயதான சப்னா யாதவ் என்ற பெண்ணை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்துள்ளார். ஏற்கனவே திருமணமான சப்னா அவரின் காதலை ஏற்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நரேந்திர பஞ்சாபி அவரை தொந்தரவு செய்ததால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 

இதனையடுத்து கோபமடைந்த நரேந்திர பஞ்சாபி, பூக்கடையில் வேலை செய்து வந்த அப்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.