அதிர்ச்சி வீடியோ! குஜராத் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. நோயாளிகள் வெளியேற்றம்.!

 

குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாஹிபாக் பகுதியில் 10 மாடி கொண்ட ராஜஸ்தான் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை தனியார் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறித்து 30 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் மருத்துவமனையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 125 நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லை. மருத்துவமனையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியின் காரணமாக அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பல பொருட்கள் தேசம் அடைந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து வெளியே புகை வந்து கொண்டு இருப்பதாக அங்கு புகைமண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுதொடர்பாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது, மேலும் அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் தீப்பிடித்து பெரும் புகையை ஏற்படுத்தியது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு குழுக்கள் பணியாற்றினர். மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து புகை தொடர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்தது 125 நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.