அதிர்ச்சி.. ஓடும் ரயில் இருந்துஉ பெண்ணை தள்ளிவிட்ட TTE.. ஏசி கோச்சில் ஏறியதால் விபரீதம்!

 

அரியானாவில் ஃபரிதாபாத்தில் ஜெனரல் டிக்கெட் வாங்கி ஏசி கோச்சில் ஏறிய ஒரு பெண்ணை டிடிஇ வெளியே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் இருந்து ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டு உள்ளது. இப்பெட்டியின் ஏசி கோச் ஒன்றில் பாவ்னா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது உடமைகளுடன் ஏறி பயணம் செய்து வந்துள்ளார். இவர் ஃப்ரிதாபாத்தில் உள்ள எஸ்ஜிஜேஎம் நகரில் வசிப்பவர் என்றும் ஜான்ஸியில் நடந்த ஒரு திருமணவிழாவிற்காக சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக பாவ்னா, முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் ஜெனரல் டிக்கெட் எடுத்து இருக்கிறார். முன்பதிவு செய்யப்படாத பெட்டிக்கு செல்வதற்கு முன்னதாக ரயில் புறப்பட இருந்ததால், அவசர அவசரமாக ஏசி கோச் ஒன்றில் ஏறி இருக்கிறார். தவறான கோச்சில் பாவ்னா ஏறியதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், பாவ்னாவிடம், உடனடியாக ரயிலை விட்டு கீழே இறங்கி முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணிக்குமாறு கூறியிருக்கிறார்.

அதற்கு பாவ்னாவும், அடுத்த ஸ்டேஷனில் இறங்கி போவதாகவும், தேவைப்பட்டால் இதற்கான அபராதத்தை செலுத்துவதாகவும் டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். இருப்பினும் டிக்கெட் பரிசோதகர் பாவ்னா பேச்சை கேட்க மறுத்ததுடன், பாவ்னா உடமைகளை தூக்கி வெளியே எறிந்ததுடன் நிற்காமல் பாவ்னாவை பிடித்து வெளியே தள்ளியும் விட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய பாவ்னா ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டிருக்கிறார். பயணிகள் உடனடியாக அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிப்பாட்டி இருக்கின்றனர்.