அதிர்ச்சி.. வளர்ப்பு பூனைக்கு ரேபிஸ் தொற்று.. தந்தை, மகன் பரிதாப பலி!

 

உத்தரபிரதேசத்தில் ரேபிஸ் நோயால் தந்தை மகன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டின் அக்பர்பூர் நகரை சேர்ந்தவர் தேஜாஸ். இவரது மகன் அங்கத். இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்கள் தங்களது வீட்டில் ஒரு பூனையை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூனையுடன் விளையாடுவதும் அதற்கு உணவளிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தெருநாய் ஒன்று பூனையை கடித்ததால் அடுத்த சில நாட்களில் வெறிநாய்க் கடியின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது. இதனை குடும்பத்தினர் யாரு கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பூனையுடன் அங்கத் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​பூனை கீறியுள்ளது.

இந்த நிலையில் தான் அங்கத்தின் உடல் நிலை படிப்படியாக மோசமடையத் தொடங்கியுள்ளது. பூனையின் அறிகுறிகள் அங்கத்திடம் தோன்றத் தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார். அவருக்கும் ரேபிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ரேபிஸ் நோயால் தந்தை மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.