அலறிய DJ மியூசிக்! மணமேடையிலேயே நெஞ்சை பிடித்து சரிந்த இளைஞர்.. திருமண விழாவில் நடந்த சோகம்!!

 

பீகாரில் திருமண விழாவில் நன்றாக இருந்த மணமகன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் உள்ள மணிந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் (22). இவருக்குப் புதன்கிழமை அன்று இந்தர்வா கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது. அங்கு அப்போது அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். மணமகனின்முகம் மட்டும் இருக்கமாகவே இருந்தது. அங்குத் திருமணத்திற்காக டிஜே இசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் உரத்த சத்தத்தில் பாடல்களை இசைக்கத் தொடங்கியதால் மணமகனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

இதனால் பாடல்களை நிறுத்துமாறு அவர் பல முறை சொல்லியுள்ளார். குறைந்தது சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும் டிஜே இசைக்கு அங்குப் பலரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். இதனால் மணமகன் சொன்னதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான், அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மேடையிலேயே சரிந்தார். 

இதையடுத்து பதறியடித்துக் கொண்டு அவரே அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சில நிமிடங்களில் உற்சாகமாக இருந்த திருமண வீடு துக்க வீடாக மாறிவிட்டது.

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், “நாங்கள் அளித்திருக்கும்] பரிந்துரையைக் காட்டிலும் அதிக ஒலியைக் கேட்கத் தொடங்கும் போது பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகிறது. காதுகுழலில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. மேலும், சிலருக்கு இதய பிரச்சனைகள், தூக்கமின்மை மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளையும் கூட ஏற்படுத்துகிறது. இருப்பினும், இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதுவே பிரச்சினை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.