கொடூரமாக தாக்கிய காண்டாமிருகம்.. இளைஞர் பரிதாப பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

 

அசாமில் காண்டாமிருகம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் மோரிகான் பகுதியில் போபிடோரா வனவிலங்கு என்ற சரணாலயம் உள்ளது. இப்பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை காண்டாமிருகம் துரத்திச் சென்று கொடூரமாக தாக்கியது.

இதனால் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த சதாம் உசேன் (37) என்பது தெரியவந்தது.