மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி!!

 

மணிப்பூர் மாநிலத்தில் 2 ஆண்டுகளாக கலவரம் நடந்து வரும் நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.  மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங்  பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பிப்ரவரி 9ம் தேதி அளித்திருந்தார். பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்ட நிலையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இது வரையிலும் 11 தடவை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2001-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி வரை  277 நாட்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

11 தடவையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஆட்சிக்கு வருவார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.