டெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!!

 

76-வது குடியரசு நாள் விழாவையொட்டி டெல்லியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்.

குடியரசுத் தலைவர் கொடியேற்றி வைத்ததும் வானில் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.குடியரசு நாள் விழாவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கடமை பாதை பகுதியில் நடைபெறுகிறது. குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய குடியரசுத் தலைவர் பிரபோவா சுபியந்தொவும் சாரட் வண்டியில் கடமைப்பாதைக்கு வந்தனர்.அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.

இந்தோனேசிய குடியரசுத் தலைவர் பிரபோவோவுக்கு முப்படை தளபதிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். குடியரசு தினத்தையொட்டி கடமைப்பாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.