‘இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ தமிழில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சித்திரை திருநாள் என்பது வசந்த காலத்தின் ஆரம்பமாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று ‘குரோதி’ புத்தாண்டு இன்று பிறந்துள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.