பிரதமர் மோடி பதவிக்கு ஆபத்தில்லை... ஆர்.எஸ்.எஸ். தரப்பில் க்ரீன் சிக்னல் கிடைச்சாச்சு!!
பாஜகவில் 75 வயதுக்கு மேல் கட்சிப் பொறுப்புகளோ, அரசுப் பதவிகளோ கிடையாது என்று வரையறுக்கப்படாத விதி நடைமுறையில் இருக்கிறது. முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி தான் பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக அறியப்பட்டார். ஆனால் 75 வயதைக் காட்டி அவரை போட்டியில் இருந்து விலக்கி வைத்து விட்டு பிரதமர் ஆனார் மோடி.
மேலும் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இப்போது பிரதமர் மோடியும் 75 வயதை எட்ட உள்ளார். 75வயது விதிப்படி பிரதமர் மோடியும் பதவி விலகி அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும்.
இதை வலியுறுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அதை மறுக்கும் வகையில் பேசியுள்ளார்.
75 வயதானால் ஓய்வு பெற வேண்டும் என ஒருபோதும் சொல்லவில்லை. என்று மோகன் பகவத் பல்டி அடித்துள்ளா, தற்போது மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளதால் பிரதமர் மோடி பதவியில் தொடர ஆர்.எஸ்.எஸ் க்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெளிவு படுத்தியுள்ளார் மோகன் பகவத்.
மோகன் பகவத்தின் இந்தக் கருத்தால், பிரதமர் மோடி பதவியில் நீடிப்பார் என்று தெளிவாகியுள்ளது. அதே வேளையில், 2029ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பிரதமர் மோடியை முன்னிறுத்தித் தான் பாஜக போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.