குழந்தை திருடன் எனக்கூறி துரத்திய மக்கள்.. 100 அடி உயரத்தில் இருந்து குதித்து உயிரை விட்ட இளைஞர்.. பகீர் வீடியோ!
Updated: Sep 11, 2024, 02:06 IST
உத்தர பிரதேசத்தில் குழந்தை திருடன் எனக்கூறி மக்கள் துரத்தியதால் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார் (31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தை திருடன் எனக் கூறி கிராம மக்கள் அவரை துரத்தியதால், பாலத்தில் ஏறி சுமார் 8 மணி நேரமாக அங்கும் இங்குமாக ஓடி போக்கு காட்டி வந்துள்ளார். அவரை மீட்பதற்காக போலீசார் பாலத்தில் ஏறியதும் அங்கிருந்து குதித்துள்ளார்.