3வது முறையாக செந்நிறமாக மாறிய பாண்டி பீச்.. வைரல் வீடியோ!

 

புதுச்சேரியில் சிகப்பு நிறமாக காட்சியளிக்கும் கடலை ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான். இந்த நிலையில், கடந்த வாரம் புதுவை கடற்பகுதியில் புருசு குப்பத்தில் இருந்து தலைமை செயலகம் வரை கடல் நீர் செந்நிறமாக மாறி காணப்பட்டது. இது புதுச்சேரி மக்களிடையே ஆச்சாரியத்தை ஏற்படுத்தியது. கடலில் கலக்கும் கழிவு நீரால் நிறம் மாற்றம் ஏற்பட்டிருக்களாமா என சந்தேகமும் ஏற்பட்டது.

இதனை அடுத்து தேசிய கடல் ஆராய்சி நிறுவனமும், புதுச்சேரி மாசு கட்டுபாட்டு வாரியமும் கடல்நீரை எடுத்து அதனுடைய மாதிரியை ஆய்வு செய்தனர். கடல்நீர் மாதிரியை ஆய்வு செய்த போது, ஆராய்ச்சியாளர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த நுண்ணுயிரிகளின் பெறுக்கம் காரணமாக கடல் நீர் நிற மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 

இது கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கபட்டது. இந்த நிலையில், மீண்டும் இன்று அதே பகுதியில் கடல் நீரின் நிறம் மாறிக்காணப்பட்டது. விடுமுறை நாளான இன்று பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் கடற்கரைக்கு வந்தனர். அவர்கள் நிறம் மாறிய கடல் பகுதியில் புகைபடம் எடுத்துகொண்டனர்.