ஒடிசா ரயில் விபத்து.. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

 

ஒடிசா ரயில் விபத்து குறித்து புவனேஸ்வரில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாகா நகர் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2ம் தேதி கோரமண்டல் மற்றும் சாலிமர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிய விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துடன் 1,175-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த ரயில் விபத்து தொடர்பாக ஏற்கனவே ரயில்வே போலிசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த ஜூன் 6-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றபட்டு விசாரணை உடனடியாக தொடங்கபட்டது.

இந்த ரயில் விபத்து தொடர்பாக மரணம் விளைவிக்க கூடிய குற்றம், ஆதாரங்களை அழிக்க காரணமாக இருந்தது ஆகியவற்றிற்காக, இந்திய தண்டனை சட்டம் 304, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஒடிசா ரயில் விபத்து நடத்த பகுதியில் பணியாற்றிய சீனியர் செக்‌ஷன் பொறியாளர் அருண் குமார் நொஹந்தா, செக்‌ஷன் பொறியாளர் முகமது அமீர்கான், டெக்னீஷியன் பப்புகுமார் ஆகிய 3 பேரையும் கடந்த ஜூலை 7-ம் தேதி சிபிஐ கைது செய்தது.

இந்த பிரிவுகளின் கீழ் போகேஸ்வர் நகரில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. விபத்து நடந்த 2 மாதத்திற்க்குள் சிபிஐ புலன் விசாரணையை நடத்தி முடித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.