துணை முதலமைச்சர் மீது புதிய வழக்கு கூடாது! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

 

சனாதன தர்மம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரத்தில் அவர் மீது வட மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உதயநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்து புதிதாக எந்த வழக்கும் பதியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.