அதிக ஆபாச காட்சிகள்.. ஓடிடி தளங்களுக்கு தடை விதித்த ஒன்றிய அரசு!
இணையதளங்களில் மோசமான மற்றும் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்களை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.
ஆபாசமான, மோசமான மற்றும் சில சந்தர்ப்பங்களில், ஆபாச உள்ளடக்கத்தை வெளியிடும் 18 ஓடிடி தளங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 19 இணையதளங்கள், கூகுள் பிளே ஸ்டோரில் 7 ஆப்ஸ், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 3 ஆப்கள் மற்றும் இந்த ஒடிடி தளங்களுடன் தொடர்பில் இருந்த 57 சமூகவலைத்தள கணக்குகளையும் ஒன்றிய அரசு முடக்கியுள்ளது.
இந்த 57 சமூக வலைதளங்களில் 12 ஃபேஸ்புக் அக்கவுண்ட் , 17 இன்ஸ்டா அக்கவுண்ட், 16 எக்ஸ் தள கணக்குகள் மற்றும் 12 யூடியூப் கணக்குகளை முடிக்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் விதிகளின் கீழ், இந்திய அரசின் பிற அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, பெண்கள் உரிமைகள் மற்றும் குழந்தை உரிமைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.