ஆட்டோ மீது மினி வேன் மோதி கோர விபத்து.. 8 பேர் உடல் நசுங்கி பலி.. பகீர் வீடியோ!

 

மகாராஷ்டிராவில் ஆட்டோ மீது மினிவேன் மோதிய கோர விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மினி வேன் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கல்யாணை நோக்கி சென்று கொண்டிருந்தது. புனே மாவட்டத்தில் உள்ள பிம்பல்கான் ஜோகாவிற்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் எதிரே வந்த ஆட்டோ மீது அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பேர், மினி வேன் ஓட்டுநர் என மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 8 பேரில் 5 ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர். அவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.