கீழ் உதட்டின் உள்ளே காதலியின் பெயரை டாட்டூவாக குத்திய காதலன்.. வைரலாகும் வீடியோ..!
கீழ் உதட்டின் உள்ளே காதலியின் பெயரை இளைஞர் டாட்டூ குத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது காதலி அல்லது காதலன் பெயரை உடலில் பச்சை குத்துவது. பொதுவாக கை, கால்களில் பச்சை குத்துவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், காதலியின் பெயரை இதயத்திற்கு நெருக்கமான நெஞ்சில் பச்சை குத்திக்கொள்வதை சில காதலர்கள் செய்வதுண்டு. இங்கு ஒருவர் வித்தியாசமாக காதலியின் பெயரை கீழ் உதட்டிற்கு அடியில் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
‘அம்ருதா’ என்ற தனது காதலியின் பெயரை அந்த நபர் டாட்டூ குத்த தேர்ந்தெடுத்த இடம் தான் இந்த பதிவு வைரலாக மாறுவதற்கு காரணமாக மாறி உள்ளது. பொதுவாக காதலியின் பெயரை கைகள், நெஞ்சு பகுதி, முதுகு கழுத்து என பல்வேறு இடங்களிலும் குத்துவது வாடிக்கை. ஆனால் அந்த நபர் தனது காதலி அம்ருதாவின் பெயரை தனது கீழ் உதட்டில் பச்சை குத்தியுள்ளார்.
A post shared by Abhishek Sapkal (@tattoo_abhishek_sapkal_4949)
டாட்டூ ஆர்டிஸ்ட் அபிஷேக் சப்கல் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இதனை அதிகளவில் பகிர்ந்து இணையதள வாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை இதுவரை 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவிக்கும் பலரும், என்னதான் இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான் என்ற ரீதியிலேயே பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.