டாக்டர் கண்முன்னே மாரடைப்பால் உயிரிழந்த நபர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

 

மத்திய பிரதேசத்தில் டாக்டரிடம் சோதனைக்காக வந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சோனு என்பவர் உடல் சோதனைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை டாக்டர் சோதித்து கொண்டிருக்கிறார். சோதித்து கொண்டிருக்கும் போதே அந்த நபர் சரிந்து விழுகிறார். உடனே டாக்டர் சோதித்து பார்க்கிறார். அதில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து பிரேத பரிசோதனையில் அவர் மாரடைப்பால் இருந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் மருத்துவரிடம் பேசுவதைக் காட்டுகிறது, அவர் அவரை பரிசோதிக்கத் தொடங்கினார். திடீரென்று, அந்த நபர் மருத்துவர் முன் சரிந்து விழுவதைக் காணலாம். உடனடியாக அவரை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.