3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது.. சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்வபம்!
சத்தீஸ்கரில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுமி நேற்று தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் அந்த பகுதிக்கு வந்து இருக்கிறார்.
அப்போது, அந்த நபர் சிறுமியை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணாததால் அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அப்பகுதி மக்களுடன் சேர்ந்து அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர். பின்னர் சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமியின் நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் சிறுமியின் பெற்றோர் சிட்டி கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.