பழுதாகி நின்ற பராமரிப்பு ரயில்.. தள்ளிச் சென்ற ரயில்வே ஊழியர்கள்.. வைரல் வீடியோ!

 

உத்தர பிரதேசத்தில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரயிலை ஊழியர்கள் தள்ளிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
 
பிரேக் டவுன் ஆகிவிட்ட பேருந்தை பயணிகள் பலரும் தள்ளி செல்லும் காட்சியை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் பழுதாகி நின்ற ரயிலை யாரவது தள்ளிச் செல்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் பழுதாகி நின்ற பராமரிப்பு ரயிலை ரயில்வே ஊழியர்கள் சிறிது தூரத்திற்கு தள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.