காஷ்மீரில் திடீர் நிலசரிவு.. தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகள் மற்றும் தாய் பலியான சோகம்!

 

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் மித முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் மகூர் துணை மண்டலத்திற்கு உட்பட்ட சஸ்ஸனா கிராமத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.

கனமழை காரணமாக இன்று காலை அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 மாத பெண் குழந்தை, அதன் தாய் மற்றும் 2 குழந்தைகள் என 4 பேர் சிக்கி கொண்டனர்.

அவர்களை மீட்க வழியில்லாத சூழலில், அனைவரும் உயிரிழந்து விட்டனர். அவர்கள், முகமது பாரீத் என்பவரின் மனைவியான பல்லா அக்தர் (30), அவர்களின் மகள்களான நசீமா அக்தர் (5), சபீன் கவுசர் (3) மற்றும் 2 மாத குழந்தையான சம்ரீன் கவுசர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.