கர்நாடகாவில் குழந்தையை கார் ஏற்றிக் கொன்ற தந்தை.. அதிர்ச்சி வீடியோ!

 

கர்நாடகாவில் ஒன்றரை வயது குழந்தை தந்தையின் கார் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட்டில் தந்தையின் கார் எதிர்பாராதவிதமாக குழந்தை மீது மோதிய சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது. உயிரிழந்த குழந்தை ஷைஜா ஜன்னத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னப்பட்டினம் சென்ற குடும்பத்தினர் இரவு 11.30 மணியளவில் வீடு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அனைவரும் காரை விட்டு இறங்கிய பிறகு, குழந்தையின் தந்தை வழக்கமான இடத்தில் வாகனத்தை நிறுத்த முடிவு செய்தார். இந்த நேரத்தில் தந்தை காரை ஓட்டிச் சென்றதால், குழந்தை கார் அருகே வந்து கதவு அருகே நின்றது.