இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு.. 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!!

 

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 227 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்திய கடற்படையில் காலியாக உள்ள SSC Officer பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech, M.Sc, ME/M.Tech மத்திய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.04.2023 முதல் 14.05.2023 வரை விண்ணப்பிக்கலாம். 

பதவி : SSC Officer

காலியிடங்கள் : 227

கல்வித்தகுதி : BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc 

வயது வரம்பு : ஜனவரி 2, 1999 முதல் ஜூலை 1, 2004-குள் பிறந்தவராக இருக்க வேண்டும்

சம்பளம் : மாதம் ரூ.56,100

விண்ணப்பக் கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை : 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.05.2023